அந்த தவறைப் பற்றி இப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் – தோனி உருக்கம் !

உலகக்கோப்பைப் போட்டியில் நியுசிலாந்து அணிக்கெதிரானப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசித்துக் கொண்டு இருப்பதாக தோனிக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசியாக இந்திய அணிக்காக விளையாடியது உலகக்கோப்பையில் நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிதான். அதன் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அந்த போட்டியில் அவர் ரன் அவுட் ஆனது இந்தியாவின் தோல்வியை நிர்ணயித்தது.

இந்நிலையில் சமீபத்தில் தோனி அளித்த நேர்காணல் ஒன்றில் ‘எனது முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன்,, நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனேம்.  அந்த போட்டியில் தாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று இப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Published by
adminram