கைதி படத்துக்கு நானும் இயக்குனர்தான் – லோகேஷை நெகிழ வைத்த கமல் !

dcab0d0d8d4ddbbaba962976ff57702c-2

நானும் கைதி படத்தின் இயக்குனர்தான் எனப் பேசி நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜைப் பெருமைபடுத்தியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் மெஹா ஹிட்டாகி கோலிவுட்டைக் கலக்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் ‘நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. ஆனால் கமல் நடித்த அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். அவருடைய படங்கள் தான் எனக்கு கைதி எடுக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்தது’ எனக் கூறினார்.

அதன் பின்னர் பேசிய கமல், ‘என்னுடைய படங்கள் அவருக்கு இன்ஸ்பிரேஷன் என்பதில் மகிழ்ச்சி. அந்த வகையில் கைதி படத்துக்கு நானும் ஒரு இயக்குனர்தான். ’ எனக் கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல், லோகேஷ் கனகராஜ், கைதி, kamal, lokesh kanagaraj, kaithi

Kamal says he is also the director of kaithi

 

Related Articles

Next Story