ரோஹித் சர்மாவின் சிக்ஸர்களை என்னால் நம்பவே முடியவில்லை: உச்சந நடிகரின் பாராட்டு

Published on: January 29, 2020
---Advertisement---

edd0c00a45d01653ce7cbdee8349d6f7

இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியாவின் ரோஹித் சர்மா அபாரமாக கடைசி 2 பந்துகளில் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த வெற்றியை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் தமது டுவிட்டரில் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் 

இந்திய அணி கொடுத்த 180 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடிய நிலையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது. இதனை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. பின்னர் 18 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா 4 பந்துகளில் வெறும் 8 ரன்களே எடுத்தனர். எனவே இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ரோகித் சர்மா அடுத்த இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனை ஸ்டேடியத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களை நம்பாமல் இந்த இரண்டு சக்திகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் 

இந்த நிலையில் இந்த இரண்டு சிக்சர்கள் குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் தனது டுவிட்டரில் ’சூப்பர் ஓவரில் என்ன ஒரு அருமையான வெற்றி! நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி முதல் முறையாக தொடரை வென்றுள்ளது. இரண்டு பந்துகளில் 10  ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் அடித்த அந்த 2 சிக்சர்களை என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார். அமிதாப் பச்சனின் இந்த பாராட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் நன்றி தெரிவித்துள்ளனர்

Leave a Comment