ஜெயலலிதாவால் நான் குழந்தை பெற்று கொள்ளவில்லை: விஜயசாந்தி பேட்டி

ஜெயலலிதாவின் கொள்கையைத்தான் பின்பற்றியதால்தான், குழந்தை பெற்றுகொள்ளவில்லை என்று நடிகை விஜயசாந்தி பேட்டி என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசியலில் தனக்கு ஜெயலலிதாதான் குரு என்றும், அவர் எவ்வாறு குடும்பம் குழந்தை என்று இல்லாமல் பொது வாழ்விற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்தாரோ அதே போல் நானும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் பொதுத் தொண்டு செய்ய வேண்டும் என்று விரும்பியயதாகவும், இதை எனது கணவனிடம் கூறியபோது அவரும் அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அதனால் தான் தான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றும் நடிகை விஜயசாந்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

மேலும் தற்போதைய நடிகைகள் குறித்து கூறிய போது இந்த கால நடிகைகளுக்கு கேரவன் உள்பட பல்வேறு வசதிகள் இருக்கிறது என்றும், ஆனால் நாங்கள் நடிக்கும் போது எந்தவித வசதியும் இருக்காது என்றும், காருக்குள் தான் உடை மாற்றிக் கொள்வோம் என்றும் காற்று கூட இல்லாத இடத்தில் வெறும் விசிறியை வைத்துக் கொண்டு சமாளித்து தூக்கம் கூட இல்லாமல் நடித்து கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார் 

மேலும் அம்மா, அக்கா போன்ற சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்றும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள வாய்ப்பு வந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் அதுவும் ஆண்டுக்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தனக்கு அரசியல்தான் முக்கியம் என்றும் அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்

Published by
adminram