எனக்கு அந்த அறிவு மட்டும் சுத்தமா இல்லை: நடிகை டாப்ஸி

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின்னர் ஆரம்பம், வை ராஜா வை, உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பெரும்பாலான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார்

இந்த நிலையில் அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் பரபரப்பான கருத்தை கூறி வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பெரும் பிரச்சினையாக நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் திருத்தம் அதுகுறித்த போராட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ’அந்த சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு எனக்கு பொது அறிவு, அரசியல் அறிவு இல்லை. ஒரு விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவதற்கு முன்னர் அதை பற்றி தெளிவாக தெரிந்து கொண்ட பின்னர்தான் தெரிவிக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது அதனால் அதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிகிறது என்று தெரிவித்துள்ளார் 

குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து பல்வேறு நட்சத்திரங்கள் தைரியமான கருத்தை கூறி வரும் நிலையில் நடிகை டாப்ஸி தனக்கு எதுவும் தெரியாது என்று நழுவி விடுவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

Published by
adminram