கிரிக்கெட்டுன்னா என்னன்னே தெரியாது… அப்புறம் எப்படி முரளிதரன் வேடத்தில்- விஜய் சேதுபதி குழப்பம்!

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் பயோ பிக்கில் நடிக்க உள்ளதும் அதற்கு இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதும் அனைவரும் அறிந்ததே.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 800 என்ற பெயரில் உருவாக உள்ள நிலையில் அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார். ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட முரளிதரனின் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்தனர். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் இந்த படத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரில் சென்றும் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதனால் இப்போது அந்த படத்தில் இருந்து விலகி விடலாமா என யோசித்து வருகிறாராம் விஜய் சேதுபதி. மேலும் அதுமட்டுமில்லாமல் தனக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி முரளிதரனின் பவுலிங் ஆக்‌ஷனை எல்லாம் செய்து படத்தில் நடிப்பது என்ற குழப்பத்திலும் உள்ளாராம்.

Published by
adminram