4 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தின் வெளியீட்டு தொகையில் ரூ.5 கோடி நிதியுதவி செய்யப்படும் என சூர்யா அறிவித்துள்ளார். அந்த தொகை பொதுமக்கள், கொரோனா காலத்தில் பணியாற்றிய சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக சார்ந்தவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்து கொடுக்கப்படும். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சூர்யா கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்ப்போது இயக்குனர் சீனு ராமசாமி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” திரைப்படம் வெளியீடு செய்த பிறகு நற்காரியங்களுக்கு நன்கொடை தருதல் அறிவோம். ஆனால், 5 கோடி நன்கொடை நன்மைகள் படம்வெளியீடு முன்னே முதல் முறையாக அறிகிறோம். சூரரைபோற்று திரைப்படம் வெல்லட்டும். அடுத்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் ஆளட்டும் வாழ்த்துக்கள் சூர்யா என பதிவு செய்து சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…