ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரை இதுக்குதான் வைத்தேன் – மனம் திறந்த முருகதாஸ் !

தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு ஆதித்யா அருணாசலம் என பெயர் சூட்டப் பட்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கதா பாத்திரங்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் எப்போதும் மக்கள் மனதில் இடம் பிடிக்கக் கூடியவை. முத்து, அருணாசலம், பாட்ஷா, படையப்பா உள்ளிட்டவைகள் இதற்கு சிறந்த உதாரணம். தற்போது ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு சூட்டப்பட்டுள்ள ஆதித்யா அருணாசலம் என்ற பெயரும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள வேளையில் அந்த பெயர் குறித்து முருகதாஸ் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதித்தியா அருணாசலம் என்பதில் ஆதித்யா தன் மகன் பெயர் என்றும் அருணாசலம் தன் தந்தையின் பெயர் என்றும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அந்த பெயரை வைத்ததாக சொல்லியுள்ளார்.

Published by
adminram