அமெரிக்காவில் நடந்த நிறவெறிக் கொலையை அடுத்த உலக அளவில் கறுப்பின மக்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர், போலிஸ் காரர்களால் சாலையில் வைத்து கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தையும் கண்டனங்களையும் உருவாக்கியது. இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த போராட்டங்களுக்கு வெள்ளையின மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது சம்மந்தமான வெள்ளையின நடிகை எமி ஜாக்சன் ‘நிறவெறிக்கு எதிரான முதல் கல்லை எடுத்து வைத்துள்ளேன்.ஆனால் அடுத்த பிரச்சனை ஒன்று வந்தால் இதை மறந்துவிடுவதல்ல. என் குழந்தையை நிறப்பாகுபாட்டிற்கு எதிராக அன்பு மற்றும் மனித நேயத்துடன் வளர்ப்பேன் என்றும் அவனை அனைவரையும் சமமாக மதிக்கும்படி வளர்ப்பேன்’ எனக் கூறியுள்ளார்.
எமி ஜாக்சன், நிறவெறி, அமெரிக்கா, போராட்டம், amy Jackson, racism, America, protest
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…