அந்த படத்தை 40 முறை பார்த்தேன்… விஜய் ரசிகராக மாறினேன்….நடிகர் சாந்தனு பேட்டி

காதல், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட சில முக்கிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குதான் முதலில் வந்தது. ஆனால் அவற்றை தவற விட்டார். அதன் பின் அவர் நடித்த படங்கள் பெரியாக வெற்றியை பெறவில்லை. எனவே, திரைத்துறையில் ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ விஜய் அண்ணா நடித்த கில்லி திரைப்படத்தை 40 முறை பார்த்திருப்பேன். அதேபோல் ரஜினி சார் நடித்த அதிசியப்பிறவி படத்தை 100 முறை பார்த்திருப்பேன். கமல் சார் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் கேசட் தேயும் அளவுக்கு பார்த்திருப்பேன். கில்லி பார்த்த பின்னரே விஜய் அண்ணாவின் ரசிகர் ஆனேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
adminram