வசூலை அள்ளிய ‘நான் சிரித்தால் ’ – இத்தனை கோடிகளா?..

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே, இசையமைப்பாளராக இருந்தாலும் தொடர்ந்து அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 

இயக்குனர் ராணா இயக்கத்தில் அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘நான் சிரித்தால் தீபாவளி’. இப்படம் பற்றிய நேர்மறையான விமர்சனங்கள் எழவில்லை என்றாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியியில் ஆதரவு எழுந்துள்ளது.

நேற்று வரை இப்படத்தின் வசூல் ரூ.11 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. ஆதி நடித்த படங்களில் இதுவே அதிக ஓப்பனிங் வசூல் ஆகும். இந்த வார வசூலை பொறுத்து இப்படம் ஹிட் வரிசையில் இடம் பிடிக்குமெ என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஆதி நடிப்பில் ஏற்கனவே வெளியான மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய 2 திரைப்படங்களும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram