More

இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது – உலகக்கோப்பையில் விளையாட ஆசைப்படும் 34 வயது வீரர்!

ராபின் உத்தப்பா 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதன் முதலாக களமிறங்கிய போது அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் ஏனோ அவரால் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட முடியவில்லை. இதுவரை 46 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் கடைசியாக இந்தியாவுக்கு விளையாடியது 2015 ஆம் ஆண்டில்.

Advertising
Advertising

இப்போது 34 வயதாகும் இவர் மீண்டும் அணிக்குத் திரும்பி உலக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிரிக் இன்போ தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் ‘மேற்கொண்டு சாதிக்கவேண்டும் என்ற தீ என்னுள் இருக்கிறது. அடுத்த உலகக்

கோப்பைப் போட்டியில் நான் விளையாடுவேன் என நம்பிக்கை உள்ளது. அதற்குக் கடவுளின் ஆசி மற்றும் அதிர்ஷ்டம் முக்கியமானது.  இன்னும் சிறியதொரு வாய்ப்பைதான் நான் எதிர்பார்க்கிறேன்.எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts