இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இவர் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். அதன்பின் ஆண்டவன் கட்டலை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜயுடன் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டார். அதற்கு ‘எனக்கு 5 பேரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை. உங்களை நேரில் பார்த்தால் உங்களையும் திருமணம் செய்து கொள்வேன். நான் விளையாட்டாக கூறவில்லை. உண்மையாகவே நான் 5 பேரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அப்படி இல்லையெனில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் ’ எனக்கூறி அந்த ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…