இந்தியன் 2 படத்தைத் தயாரிப்பது தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷங்கர் அந்த படத்தில் இருந்தே விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 படப்பிடிப்பு பல கட்டங்களாக பொறுமையாக நடந்து வந்த வேளையில் பிப்ரவரி மாதம் பூந்தமல்லியில் படப்பிடிப்பு நடந்தபோது நிகழ்ந்த கோர விபத்தில் 3 படக்குழுவினர் பலியானதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியாத நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது.
இந்த விபத்து நடந்ததில் இருந்தே கமல், படத்தை தயாரிக்கும் லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகிய மூன்று தரப்புக்கும் சுமூக உறவு இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை தடாலடியாக பல கோடிகள் தயாரிப்பு நிறுவனம் குறைக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஷங்கர் அதிருப்தியும் ஆத்திரமும் அடைங்த ஷங்கர் படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்தே விலக முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…