தோனியின் தலைமையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கபில்தேவ்க்குப் பின் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குரியவராக இஷாந்த் ஷர்மா இருந்து வருகிறார். இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இன்னும் 4 போட்டிகளில் 100 போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை அடைய இருக்கிறார்.
இந்நிலையில் இவர் ’முன்னாள் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், நாங்கள் சுழற்சி முறையில் அணியில் சேர்க்கப்பட்டோம். அதனால் எங்களுக்குப் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற மன அழுத்தத்தால் நான் தூக்கத்தைத் தொலைத்தேன். ஆனால் இப்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…