சிறு வயதில் ரேப் செய்யப்பட்டேன் – பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்

விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் அவரின் நண்பராக இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. மேலும், கீதா கோவிந்தம், அல வைக்குந்தபுரமுலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சிறுபிள்ளையாக இருந்த போது நான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டேன். இந்த சோகத்தை பற்றி வேறு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை’ என பதிவிட்டிருந்தார்.  மேலும், இந்த குற்ற உணர்வோடு நான் வாழ்ந்து வருகிறேன். நியாயம் கிடைக்கவில்லை. உங்கள் மனிதர்களை அன்பாக இருக்க பழக்குங்கள்’ என பதிவிட்டிருந்தார்.

அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதலையும், நம்பிக்கையும் கொடுக்கம்படி கருத்துகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ‘உங்களின் ஆதரவுக்கு நன்றி. உங்களின் குழந்தைகளிடம் திடீர் மாற்றம் ஏற்பட்டால் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் சந்திக்கும் படு பயங்கரான நிகழ்வுகளை அவர்களுக்கு விவரிக்க தெரியாது’ என பதிவிட்டுள்ளார்.

Published by
adminram