அந்த நடிகருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோணியாகவும் இருப்பேன்: நாஞ்சில் சம்பத்

Published on: January 24, 2020
---Advertisement---

edced7f035b3a6e5b5acf6b23ac805c2

பழம்பெரும் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தற்போது திமுகவில் இணைந்து திமுகவுக்கு தொண்டாற்றி வருகிறார்

இந்த நிலையில் திமுக இளைஞரணி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் ’தம்பி உதயநிதிக்கு ஏணியாக இருப்பேன் தோணியாகவும் இருப்பேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா உள்பட பல மூத்த தலைவர்களுடன் அரசியல் செய்தவர் நாஞ்சில் சம்பத். இவரது அடுக்குமொழி தமிழ் பேச்சுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த அளவிற்கு தமிழில் புகுந்து விளையாடி பேசுவது இவருக்கு கைவந்த கலை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மூன்றாம் கருணாநிதிக்குப் பிறகு மூன்றாம் தலைமுறையாக அரசியலுக்கு வந்து உள்ள நடிகர் உதயநிதிக்கு அவர் ஏணியாகவும் இருப்பேன் தோணியாகவும் இருப்பேன் என்று கூறியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய வீடியோக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment