நான் அந்த தப்பை எப்போதும் செய்ய மாட்டேன் - நடிகர் சதீஷ்

by adminram |

232bc48add20f1a57a22fd08a2f86246

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தெற்கு திட்டை ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி(37). இவர் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்.

கடந்த ஜூலை மாதம் ஊராட்சி மன்ற கூட்டம் நடந்த போது ராஜேஸ்வரி கீழே அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலை சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டித்திருந்தனர். அதைத்தொடர்ந்து மோகன்ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத்தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்’ என பதிவிட்டுள்ளார். மேலும், #அனைவரும்சமம் என்கிற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

Next Story