இனிமே அந்த பக்கமே போக மாட்டேன்....கையெடுத்து கும்பிட்ட விஜய் சேதுபதி.....
தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை தனது கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. எனவேதான், தொடர்ச்சியாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் அவரின் நடிப்பில் உருவான ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் சன் டிவியில் வெளியானது. அதேபோல், மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான ‘லாபம்’ திரைப்படம் திரையரங்கில் வெளியானது.
ஆனால், இப்படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தியேட்டர்கள் வெறிச்சோடி கிடந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் ஜனநாதனோடு இணைந்து இப்படத்தை அவர் தயாரித்திருந்தார். தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் எல்லா நஷ்டமும் விஜய் சேதுபதியின் தலையில் விழுந்துவிட்டதாம். இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
எனவே, இனிமேல் திரைப்படங்களில் தயாரிக்கும் வேலையில் இறங்கவே மாட்டேன். நடிக்க மட்டுமே செய்வேன் என தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் தெரிவித்து வருகிறாராம் விஜய் சேதுபதி..
தலைப்பில் இருந்த லாபம் கையில் கிடைக்கவில்லை என்பது வருத்தமே!....