நான் சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன் - மீராமிதுனை கலாய்த்த பிக்பாஸ் போட்டியாளர் (வீடியோ)

by adminram |

0118e3000b71b57656ef17abab9f914a

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் அதிருப்தியை சம்பாதித்தவர் மீராமிதுன். ஓவர் அல்டாப், பந்தா, மற்றவர்கள் மீது புகார் கூறுவது என அவரின் அலப்பறைகளை ரசிகர்களால் ரசிக்கமுடியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும், தன்னை சூப்பர் மாடல் என்று அவரே அழைத்துக்கொள்கிறார்.

இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகள் பற்றி பேசி வருகிறார்கள். இதில் பேசிய மாடல் சம்யுக்தா ‘நான் மாடலிங் துறையில் பலருடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், என்னை சூப்பர் மாடல் என்று அழைத்துக்கொண்டதில்லை’ என தெரிவித்தார். அவர் மீராமிதுனைத்தான் கூறுகிறார் என்பதை புரிந்து கொண்ட இதர போட்டியாளர்கள் கூக்குரல் இட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவை மிராமிதுனின் டிவிட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

எனவே, விரைவில் சம்யுக்தாவை திட்டி டிவிட்டோ அல்லது வீடியோவை மீராமிதுன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story