நான் மரணம் அடைவதற்கு முன்னர் வாழும் கடைசி ஒரு மணி நேரத்தை ஸ்ரீதேவி கல்லறையில் இருக்க விரும்புகிறேன் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக 10 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் அவர் தங்கியிருந்த ஓட்டலின் குளியல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது
குறிப்பாக ஸ்ரீதேவியின் தீவிர ரசிகராக இருந்து வந்த பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஸ்ரீதேவியின் மரணத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், ஸ்ரீதேவிக்கு பதிலாக தன்னுடைய உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய இயக்குனர் ராம்கோபால் தன்னுடைய மரண தேதி, நேரம் தெரிந்தால் கடைசி ஒரு மணி நேரத்தில் தான் ஸ்ரீதேவியின் கல்லறையிலே இருக்க விரும்புவதாகக் கூறினார். அதுமட்டுமன்றி தான் மரணமடைந்தவுடன் தன்னுடைய உடலை ஸ்ரீதேவி கல்லறை அருகிலேயே புதைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் அதற்காக தன்னிடம் யாரும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார். ராம்கோபால்வர்மா தெரிவித்த இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…