
விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சாந்தனு பாக்கியராஜ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இவர் சமீபத்தில் டெல்லி மற்றும் ஷிமோகாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சாந்தனு பாக்கியராஜ், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தன்னுடைய கேரக்டர் அழுத்தமாக இருக்கும் என்றும், தன்னுடைய கேரக்டர் இல்லை என்றால் படத்தில் சுவாரஸ்யம் இருக்காது என்றும், நான் இல்லை என்றால் ‘மாஸ்டர்’ படமே இல்லை என்றும் கூறியதாக செய்திகள் வெளியானது
இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தனு பாக்கியராஜ் ’நான் அப்படி சொல்லவே இல்லை, முதலில் டைட்டிலை மாற்றுங்கள், நான் பாட்டுக்கு சிவனேன்னு என்று இருக்கின்றேன் என்னை வம்பில் மாட்டி விடுகிறீர்களே’ என்று புலம்பி உள்ளார். சாந்தனுவின் புலம்பலுக்கு பின்னரும் அந்த செய்தியும் டைட்டிலும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Yen ya ipdi ellam kelappureenga ? Na ipdi sollave Illa !
Na sivaney nu dhan iruken ♂️♂️ title eh maathunga pa https://t.co/Stqcfshs8O— Shanthnu ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) February 3, 2020