கொரோனா வைரஸ் பீதியால் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போயுள்ள நிலையில் மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார்.
மார்ச் 29 ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் கொரோனா பீதி குறையாததால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகாவது ஐபிஎல் போட்டி நடக்குமா என்பதும் சந்தேகமே.
இந்நிலையில் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் சவுரவ் கங்குலியிடம் இதுபற்றி கேட்கப்பட்ட போது ‘ ஐ.பி.எல்.லை தள்ளிவைப்பதாக அன்று அறிவித்த அன்று எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில் தான் இப்போதும் இருக்கிறோம். 3 அல்லது 4 மாதங்கள் கழித்து போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்டால் அது சாத்தியம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சர்வதேசத் தொடர்கள் பாதிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.
Keerthi suresh:…
சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம்…
சிவகார்த்திகேயன் சுதா…
VijayTV: விஜய்…
AR Rahman:…