Cinema History
இந்தியன் 2 படத்தோட வெற்றி இவருக்குத் தான் சாதகமாம்… மேட்டரை ஓப்பன் செய்த பிரபலம்
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த இந்தியன் 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி வெற்றி நடை போட்டு வருகிறது. கமல், ஷங்கர் கூட்டணி 28 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.
அது தவிர இயக்குனர் ஷங்கருக்கும் கடைசியாக வெளிவந்த படம் 2.0. அதன்பிறகு 8 வருடங்களாகப் படம் இல்லை. அதனால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தவிர தற்போது வரை படத்திற்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் தான் வந்து கொண்டு இருக்கின்றன. இந்தியன் 2 படத்தின் முடிவில் இந்தியன் 3 படத்தின் டிரைலரும் போடப்படுகிறது.
இதனால் அந்தப் படத்திற்கும் ஒரு நல்ல புரொமோஷனாக இது அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். இன்றைய 2 கே கிட்ஸ்களைக் கவரும் வகையில் படத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் எப்டிஎப்எஸ் காட்சிக்காக சென்னையில் கமல் படத்துக்கு பாலாபிஷேகம், 108 தேங்காய் உடைத்து கமலா திரையரங்கையே திருவிழாக்கோலமாக மாற்றி விட்டார் நடிகர் ரோபோசங்கர். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தைப் பற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…
இந்தியன் 2 படத்துக்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. எனது யூகத்துக்கு இந்தப் படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும். இளைஞர்கள் கூட்டம் இது க்ரின்ஜான படம்னு நினைக்கிறாங்க. இந்தக் கூட்டம் தான் இந்தப் படத்தைப் பார்த்ததும் அந்த பிரம்மாண்டத்திற்காகத் திரும்ப திரும்ப பார்க்கும் என்பது எனது நம்பிக்கை.
தமிழ்சினிமா 1000 கோடி வசூல் பண்ணுமா என எல்லா படங்களையும் கேட்டுக்கிட்டே இருக்கோம். ஆனால் 1000 கோடி பட்ஜெட்லயே இயக்குனர் ஷங்கர் ‘வேள்பாரி’ படத்தைப் பண்ணப்போறாரு. அதுக்கு ஒரு முன்னுரையை இந்தப் படம் தான் எழுதப் போகுது. எழுதி வச்சிக்கோங்க. அந்த 1000 கோடி பட்ஜெட் படமே இந்தப் படத்துக்குப் பிறகு தான் நடக்கப் போகுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.