ஒரு மாஸ் ஹீரோவின் படம் 100 கோடி மற்றும் அதற்கு மேலும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டால் அந்த படம் ஓடுகிறதோ இல்லையோ பொய்யான வசூல் கணக்கை காண்பித்து ஹீரோக்கள் தப்பித்து கொள்வதோடு, தங்களுடைய சம்பளத்தையும் ஏற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அந்த ஹீரோவை வைத்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் உள்ளனர். சமீபத்தில் கூட ஒரு மாஸ் நடிகரின் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் ஒன்று அலுவலகத்தை காலி செய்துவிட்டு அட்ரஸ் இல்லாமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தயாரிப்பாளரின் இந்த நிலையை போக்குவதற்காக தயாரிப்பாளர் சங்கம் இன்று கூடி இதற்கு ஒரு முடிவு கட்ட ஆலோசனை செய்தது. இந்த ஆலோசனையின் முடிவில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ’ஒரு திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்குப் பின்னர்தான் இணையத்தில் மற்றும் டிஜிட்டலில் வெளியிட வேண்டும்’ என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை அனைத்து தயாரிப்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது
இரண்டாவதாக உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் தோல்வி அடைந்தால் அந்த உச்ச நட்சத்திரம் தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால் தற்போது முன்னணியில் இருக்கும் ஒருசில மாஸ் நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டிற்கு மாஸ் நடிகர்கள் ஒப்புக் கொள்வார்களா? அல்லது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும்போதே அவர்களும் சில நிபந்தனைகளை விதிப்பார்களா? என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…