கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடக்காது என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 15க்குப் பின்னரும் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைத்து நடத்தலாம் என்றால் ஏற்கனவே திட்டமிட்ட சர்வதேசத் தொடர்கள் பாதிக்கும். அதனால் ஐபிஎல்2020 நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடத்தப்படாமல் போனால் ஒட்டுமொத்தமாக சுமார் 3800 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்கும் தொடர் தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்னர்தான் 15 சதவீத சம்பளம் வழங்கப்படும் என்ற விதிகளின் படி அவர்களுக்கும் சம்பளம் கிடைக்காது என சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வீரர்கள், அணிகள், பிசிசிஐ மற்றும் ஸ்பான்ஸர்கள் என அனைவருக்கும் நட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…