More

விஜய் மட்டும் நினைத்திருந்தால்?….என்னவாகி இருக்கும் தெரியுமா? – இயக்குனர் அமீர்

நெய்வேலியில் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது என பாஜகவினர் ஒரு சிலர் திடீரென கொடிபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.  இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய இயக்குநர் அமீர், ‘மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முறையாக அனுமதி பெற்று நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு போராட்டம் செய்வது கொச்சைத்தனமானது என்றும் விஜய் நினைத்திருந்தால் தனது ரசிகர்களை அங்கு நிறுத்தி போராட்டத்தை எதிர்கொண்டு இருக்கலாம் என்றும் அவ்வாறு செய்திருந்தால் மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் ஆனால் விஜய் மெச்சூரிட்டியாக அதனை செய்யாமல் அமைதி காத்தது பாராட்டுக்கு உரியது என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார் 

Advertising
Advertising

மேலும் மத்தியில் ஆளும் கட்சி தமிழகத்தில் எப்படியாவது வேரூன்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ரஜினிகாந்தை முன்னிறுத்தி வருவது. ரஜினியை முன்னிறுத்துவதற்கு விஜய் எதிர்ப்பாக இருப்பாரோ என்ற அச்சத்தின் காரணமாக அவரை பயமுறுத்த இந்த ரெய்டு நடந்து இருப்பதாக சந்தேகப்படுகிறேன். மேலும் விஜய் படத்தில் மத்திய அரசை தாக்கும் வசனங்கள் இருப்பதாக கூறுவது அபத்தமானது. சென்சார்போர்டு அனுமதித்த வசனத்தைத் தான் விஜய் பேசி இருக்கிறார் என்பதும் சென்சார் போர்டு அனுமதித்த வசனங்கள் தான் விஜய் படத்தில் இடம்பெற்றுள்ளது உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்

Published by
adminram

Recent Posts