இன்சூரன்ஸ் இருந்தால் மட்டும் இந்த படத்தை பார்க்க வரவும்: போஸ்டர் அடித்து எச்சரிக்கை

Published on: January 10, 2020
---Advertisement---

e2d89eff48089a82f1951d41f4288133

இன்சூரன்ஸ் இருந்தால் மட்டும் இந்த படத்தை பார்க்க வரவும் என தியேட்டர் அருகிலேயே போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் தியேட்டரில் படம் பார்க்க ஒருவர் கூட வராததாது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் நேரில் சென்று ஆதரவு கொடுத்தார் என தெரிந்ததே. இதனையடுத்து அவரது ’சப்பக்’ என்ற திரைப்படம் இன்று வெளியான நிலையில் இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினார். குறிப்பாக மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததை அடுத்து அவரது ரசிகராக இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்க்க முன்வந்தனர். அதே நேரத்தில் இந்த படத்தை பார்க்க கூடாது என்று முன்பதிவு செய்த பலர் டிக்கெட்டை கிழித்து போட்டதாகவும் செய்திகள் வெளியாகியது

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் இரண்டு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு திரையரங்குகளில் முன்பும் ஒரு பெரிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் இருப்பவர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க வரவும்’ என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் காரணமாக பலர் படம் பார்க்க வரவில்லை. வந்த ஒரு சிலரும் இந்த போஸ்டரை பார்த்து விட்டு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டர் நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்

Leave a Comment