இயக்குனரிடம் ஏழரையைப் போட்டுறாதீங்கன்னு சொன்ன இளையராஜா... நடந்தது இதுதான்..!
'இளையராஜாவா அப்படின்னா யாரு யாரு..'ன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. தொடர்;ந்து இவர் இசை அமைத்த படங்களும், பாடல்களும் ஹிட் அடிக்க ஆரம்பித்தன.
இயக்குனர் காரைக்குடி நாராயணன் இளையராஜாவிடம் சம்பளம் பேசிய இனிய தருணத்தை இப்படி நினைவுகூர்கிறார். அப்ப தான் அன்னக்கிளி படம் ரிலீஸாகி ஓடிக்கிட்டு இருக்கு. இளையராஜான்னு ஒரு மிகப்பெரிய மியூசிக் டைரக்டர் மக்களுக்கு மத்தியில வர்றாரு. சரின்னு அவரைப் போய் பார்த்தோம். சாந்தோமில் ஒரு சின்ன வீட்டுல அவரும், அவரது அண்ணன் பாஸ்கரும் இருந்தாங்க. நான் போனதும் காரைக்குடி நாராயணன்னு அறிமுகப்படுத்தினேன்.
நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க இசை அமைக்கணும்னு கேட்டேன். உடனே ரொம்ப சந்தோஷம்ன்னாரு. சம்பளம் எல்லாம் பேசல. முதல்ல நான் யாருன்னு தெரிஞ்சிக்கிடட்டும்னு இந்தப் படம்லாம் பண்ணினேன்னு சொல்ல ஆரம்பிச்சேன்.
உடனே எனக்கு உங்களைத் தெரியும். உங்க படத்துல கித்தார் வாசிச்சிருக்கேன்னாரு. யேசுதாஸ் பாடிய பாட்டு உன்னிடம் மயங்குகிறேன் படம் வி.குமார் இசைக்கு நான் கித்தார் வாசிச்சிருக்கேன்.... உங்களைப் பற்றி எனக்கு அறிமுகம் தேவையில்லைன்னு சொன்னார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியா இருந்தது.
ஏன்னா இளையராஜான்னு ஒரு பெரிய ஆள் உருவாகுறாரு. மத்தவனா இருந்தா இதை சொல்லவே மாட்டான். இந்த அறிமுகமே எனக்கு போதும். அடுத்து சம்பளம் எவ்வளவுன்னு கேட்டாரு. நான் 5000 ரூபாய்னு சொன்னேன்.
உடனே சிரிச்சாரு. 'கூட ரெண்டு மூன்று ரூபா சேர்த்துத் தரக்கூடாதான்னு கேட்டாரு. அவரு கேட்டது அவ்வளவு தான். ஏன்... 5 ரூபாய்க்கு பண்ணுங்களேன்'னு சொன்னேன். 'இல்ல நாங்க மூணு சகோதரர்கள் இருக்கோம். அட்லீஸ்ட் ஆளுக்கு 2 ரூபாயாவது வேண்டாமாண்ணேன்'னாரு.
அதாவது பாஸ்கர், கங்கை அமரன், இளையராஜா. ஏன்னா நான் ஒர்க் பண்ணுவேன். அவங்க எனக்கு மத்த ஹெல்ப்லாம் பண்ணுவாங்கன்னாரு. அப்புறம் யோசிச்சேன். சரி வேண்டாம். நான் சொன்னேன். 'பத்தும் வேண்டாம். நான் சொன்ன அஞ்சும் வேண்டாம். ஒரு 7500 ரூபாயா கொடுத்துடறேன்'னு சொன்னேன்.
அவரு சொன்னாரு 'ஏழரைங்கற நம்பர் ரொம்ப மோசமா இருக்கு. நாம சொல்வோமே ஏழரை சனின்னு. அதனால ஏழரை வேண்டாம். எட்டா கொடுங்க'ன்னாரு. அவருக்கு நான் கொடுத்த பணம் 8000 ரூபாய். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு காரைக்குடி நாராயணன் குறிப்பிடும் படம் தான் அச்சாணி. இந்தப் படத்தில் தான் எஸ்.ஜானகி உருகி உருகி பாடிய மாதா உன் கோயிலில் பாடல் இடம்பெற்றுள்ளது. தலைமுறை கடந்தும் இன்று வரை சர்ச்களில் ஒலிக்கும் பாடல் இதுதான்.
இந்தப் படம் 1978ல் வெளியானது. கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என எல்லாமே காரைக்குடி நாராயணன் தான். இந்தப் படத்தில் முத்துராமன், லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் படம் சக்கை போடு போட்டது.