Connect with us

இசையமைப்பாளராக மாறிய இளையராஜா பேரன்!.. தமிழ் சினிமாவிலும் சீக்கிரம் கலக்கப் போகிறார்!..

latest news

இசையமைப்பாளராக மாறிய இளையராஜா பேரன்!.. தமிழ் சினிமாவிலும் சீக்கிரம் கலக்கப் போகிறார்!..

இளையராஜா திரைத்துறையில் உள்ள தனது இசைப் பயணத்தில் 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,600 பாடல்களை உருவாக்கி, 20,000 கச்சேரிகளில் பங்கேற்று இசை உலகில் கடவுளாகவே வாழ்ந்து வருகிறார். மேலும், தமிழர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து அவரது தம்பி மற்றும் மகன்கள் இசை துறையில் அசத்தி வரும் நிலையில் அவரது பேரனும் தற்போது இசையமைப்பாளராக உருவாகி உள்ளார்.

இளையராஜாவிற்கு பாவலர் வரதராஜன் மற்றும் கங்கை அமரன் என இரு சகோதரர்களும் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளனர். மேலும், இளையராஜா, ஜீவா என்பவரை மணந்துக்கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி. இவரது மகன்கள் இருவரும் இசையமைப்பாளராகவும், மகள் பவதாரிணி பின்னணிப் பாடகியாகவும் பணியாற்றியுள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு புற்றுநோயால் காலமானார்.

இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர் தீவிர சிவனின் பக்தர் என்பதால் அடிக்கடி திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ’ஓம் நமச்சிவாய’ எனும் பக்தி ஆல்பத்தை திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டுள்ளார். மேலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த யத்தீஸ்வர் இசையமைப்பாளராக விரும்புவதாகவும், நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருப்பதாகவ்வும் கூறியுள்ளார்.

இளையராஜாவின் பேரன் கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கலக்கப் போகிறார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top