More
Categories: Cinema History latest news

இளையராஜா சம்பளமே வாங்காமல் இசை அமைத்தாரா? அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

இசைஞானி இளையராஜாவைப் பொருத்தவரை தமிழ்சினிமா என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெரும் ஜாம்பவான் அவர் தான். அவரது பாடல்கள் யாவும் இசையால் நெய்த ஒரு ஆடை. அது நமக்கு மானத்தைக் காக்கும்.

அது போல இளையராஜாவின் பாடல் நமக்கு தன்மானம், வீரம், காதல், பாசம், அன்பு என அத்தனையையும் கற்றுத் தரும். அந்த வகையில் அவரது பாடல்களைக் கேட்டாலே போதும். வலியான இதயமும் இலகுவாகி பூரண குணமடைந்து விடும்.

Advertising
Advertising

கனத்த மனதும் லேசாகி காற்றில் பறந்து விடும். அப்படிப்பட்ட பாடல்கள் பலவற்றைத் தனது அபார இசையால் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார். அவரை பலரும் பணத்திற்கு ஆசைப்படுகிறார் என்றெல்லாம் சர்ச்சையைக் கிளப்பி இருந்தனர்.

நலிவுற்ற கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த அளவு அவர் உதவி செய்து வருகிறார். காபிரைட்ஸ் கேட்பதே அவர்களுக்கு உதவுதற்காகத் தான் என்பதை பலரும் உணரவில்லை.

அவரைப் பற்றிய ஒரு தகவலை சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் லென்ஸ் நிகழ்ச்சிக்காகப் பகிர்ந்துள்ளார். இதில் நேயர் ஒருவர் கேட்ட கேள்வி இதுதான். முதல் மரியாதை படத்தில் இசை அமைத்ததற்காக இளையராஜா சம்பளமே பெறவில்லை. இது உண்மையா என்று கேட்டு இருந்தார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

முதல் மரியாதைப் படத்தைப் பொருத்தவரைக்கும் அந்தப் படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த அளவுக்கு சிறப்பான இசையை அமைத்து இருந்தார். அப்படிப்பட்ட இசையை அவர் கொடுத்திருந்த போதும் ஊதியம் எதையும் பெறவில்லை என்பது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படம். சிவாஜி, ராதா, ரஞ்சனி, வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இளையராஜா பிரமாதமாக இசை அமைத்து இருந்தார். 8 பாடல்களைக் கொடுத்து அசத்தி இருந்தார். அந்த நிலாவத்தான், பூங்காற்று திரும்புமா, வெட்டி வேரு வாசம், ஏ குருவி, ராசாவே உன்ன நம்பி, ஏ கிளியிருக்கு, ஏறாத மலை மேல, நான் தானே அந்தக்குயில் ஆகிய பாடல்கள் உள்ளன.

Published by
ராம் சுதன்