இளையராஜா இசையே இல்லாத சைக்கோ டிரைலர் – ரசிகர்கள் அதிருப்தி !

இன்று வெளியான சைக்கோ திரைப்படத்தின் டிரைலரில் பீத்தோவானின் இசை பயன்படுத்தப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான கருத்துகள் வெளியாகியுள்ளன.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹையாத்ரி, நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் நடித்துள்ள சைக்கோ படத்தின் முன்னோட்ட்டம் இன்று வெளியாகியது. மிரட்டலான காட்சிகள் கொண்ட இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனால் டிரைலர் முடிந்ததும் இயக்குனர் பெயருக்கு முன்னதாக இளையராஜா பெயர் போடப்பட்டாலும் டிரைலர் முழுவதும் அவர் இசை ஒரு துணுக்குக் கூட பயன்படுத்தப்படவில்லை. பீத்தோவானின் பிரபலமான இசைத்துணுக்கு ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இளையராஜா ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேலும் சிலரோ இது பீத்தோவானின் இசை என்று தெரியாமல் ‘ராஜா என்றைக்குமே ராஜாதான் ‘ என சிலிர்த்து சில்லறையை விட்டெறிந்து கொண்டிருக்கின்றனர்.

Published by
adminram