More

நானும் நிறவெறியால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் – கிறிஸ் கெய்ல் ஆதங்கம்!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின நபர் போலிஸாரால் சாலையில் வைத்துக் கொல்லப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் கருப்பின மக்களுக்காக போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

Advertising
Advertising

அமரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின நபரை ஒரு வழக்குக்காக போலீஸார் கைது செய்த போது அவர் ஒத்துழைக்கவிலலை என  சாலையோரத்தில் வைத்து கழுத்தைக் காலால் நெறித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அமெரிக்கா முழுவதும் போராட்டம் அதிகமாகியுள்ளது. இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா மட்டுமில்லாது உலகம் முழுவதும் ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் கருப்பின மக்கள் மட்டுமல்லாது வெள்ளையின மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திரமான கிறிஸ் கெய்ல் கிரிக்கெட்டிலும் இதுபோல நிறவெறி உண்டு எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக ‘மற்ற உயிர்களைப் போலவே கறுப்பின மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுமுட்டாள்களுக்காக கறுப்பின மக்களை அழைத்துச் செல்வதை நிறுத்துங்கள். உங்கள் சொந்தத்தை வீழ்த்துவதை நிறுத்துங்கள். நான் உலகம் முழுவதும் பயணம் செய்த போதும் என்னை இன ரீதியாக நடத்துவதை உணர்ந்திருக்கிறேன். இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இனவாதம் கிரிக்கெட்டிலும் உண்டு. ஒரு கறுப்பின வீரனாக நான் அசமத்துவமாக நடத்தப்பட்டு இருக்கிறேன். Black and powerful. Black and proud’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts