பிக்பாஸ் 5க்கு வரும் இமான் அண்ணாச்சி… அப்போ செம Fun இருக்கு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் மக்களை ரீச் செய்த நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துவிட்டது. தற்போது 5வது சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வரும் விஜய் டிவி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி,  நடிகை ஷகீலாவின் மகளும், திருநங்கையுமான மிளா , பிரபல திருநங்கை மாடல் அழகி நமீதா மாரிமுத்து உள்ளிட்ட பலர் இதில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது இமான் அண்ணாச்சி தேர்வு செய்யப்பட்டு பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக இந்த சீசனில் செம ரகளை மற்றும் கலாட்டாக்களுக்கு குறைவே இருக்காது….

Published by
adminram