சுசீந்தரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவர்தானாம்… அக்கட தேசத்தில் இருந்து பார்சலான ஹீரோயின்!
நடிகர் சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளாராம்.
நடிகர் சிம்பு குறுகிய கால படமாக சுசீந்தரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. முதலில் இந்த படத்தில் மாநாடு படத்துக்குப் பிறகுதான் சிம்பு நடிப்பார் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போதே சிம்புவின் படத்தின் வேலைகளை சுசீந்தரன் மும்முரமாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது.. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் 30 நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் எனும் தெலுங்கு நடிகை நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல தெலுங்கு படங்களில் கவர்ச்சியான பாத்திரங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.