விக்ரமின் அடுத்த படத்திற்கு எதிர்பார்த்த டைட்டில்: வைரலாகும் வீடியோ

by adminram |

e1e56295dd17f78435deda504b67cec5

நடிகர் விக்ரம் நடிக்கும் 58வது திரைப்படமான ’விக்ரம் 58’ என்ற படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தின் டைட்டில் ’கோப்ரா’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் குறித்த தகவல் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களிலும், ஒரு சில இணையதளங்களிலும் வலம் வந்தது என்பது தெரிந்ததே. எனவே எதிர்பார்த்த டைட்டிலே இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

விக்ரம் ஜோடியாக முதன் முதலாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் என இன்று வெளியாகியுள்ள டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Next Story