இந்தியா தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1.4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 6,000 ஐ தாண்டுகிறது. இதனால் உலகில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 ஆவது இடத்துக்கு வந்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 1 லட்சம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள மத்திய சுகாதார துறை இணையமைச்சர் லாவ் அகர்வால் ‘இந்தியாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விகிதம் 41 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஊரடங்கின் முறையே 7.1, 11.42, 26.59 மற்றும் 41.61 என படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்துள்ளது. அதே போல இறப்பு விகிதமும் 3.3 ல் இருந்து தற்போது 2.83 ஆக குறைந்துள்ளது. உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவிகிதமாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு ஆறுதலான விஷயமாக உள்ளது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…