நேற்று சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொண்டர்களை சந்தித்தார். அப்போது ’தொண்டர்களே எனது முதல் கடவுள்.மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் மீண்டு வருவேன்.’ என்றும் சுருக்கமாகப் பேசினார்.
அவருக்குப் பின் பேசிய பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சில் ‘குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக குரல்கள் எழுந்துள்ளன. அதே போல ஆதரவும் உள்ளது.. ஆனால், நாம் சரியாக சிந்தித்து செயல்படுவோம். இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எல்லா மதத்தவர்களும் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள்.’ எனப் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…