நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய நிர்ணயித்த 347 ரன்கள் என்ற இலக்கை நியுசிலாந்து துரத்தி வென்றுள்ளது.
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் இந்திய அணி கோலி(51), ராகுல்(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்(103) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை சேர்த்தது.
348 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடர் தோல்விகளுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக விளையாடினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து சென்றனர். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நடுவரிசை வீரர்களான வந்த ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாத்தம் அதிரடியில் புகுந்து இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். லாதம் அரைசதம் அடித்து அவுட் ஆக, அவுட் ஆகாமல் இருந்த ராஸ் டெய்லர் தனது 21 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதனால் அந்த அணி 48.1 ஓவர்களில் 348 ரன்களை 6 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்திருந்தார்.இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலானத் தொடரில் அந்த அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…