சம்பளத்தை எல்லாம் அபராதமாகக் கட்டும் இந்தியா – ஏன் கோலி இப்படி  ?

இந்திய அணியினர் குறிப்பிட்ட காலத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் கடந்த மூன்று போட்டிகளிலும் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

Also Read

இந்திய அணி நியுசிலாந்தில் முகாமிட்டு டி 20 தொடரை முடித்து தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த 3 போட்டிகளாக இந்திய அணி ஒரு விஷயத்தில் மோசமாக சொதப்பி வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் முறையே 20, 40 மற்றும் 80 சதவீதத் தொகையை அபராதமாக செலுத்தி வருகிறது.

ஒருவேளை இதே வேகத்தில் செல்லுமானால் இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசினால் இந்திய அணி வீரர்களுக்கு சம்பளமே கிடைக்காத சூழல் உருவாகும். தனது கேப்டன்சியில் அனைத்து சாதனைகளையும் செய்து வரும் கோலி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Published by
adminram