More

ஆஸியைப் போட்டுத் தள்ளிய ’குட்டி’ இந்தியா – அரையிறுதியில் சிம்மாசனம் !

தென் ஆப்பிரிக்காவில் உலக 19 வயதிக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலபரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 233 ரன்களை சேர்த்தது.  இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்வால் 62 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் எளிதான இலக்கான 234 ரன்களை எட்ட ஆஸி அணி களமிறங்கியது.

Advertising
Advertising

ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கார்த்திக் தியாகி வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை இழந்தது. அதன் பின் வந்த வீரர்கள் அனைவரும் வருவதும் அவுட் ஆகி போவதுமாக இருந்தனர். இடையில் பேட்ரிக்

-21 மற்றும் ஸ்காட்-35 ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப் பிடித்து கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

இதையடுத்து இந்தியாவின் சிறப்பான பவுலிங்கால் 43.3 ஓவரில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் கார்த்திக் தியாகி அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Published by
adminram

Recent Posts