கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நடத்தவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5300 ஐத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 149 ஆக உள்ளது. இதே போல அண்டைநாடான பாகிஸ்தானும் கொரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 4187 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 58 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவ பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தி அதன் மூலம் நிதி திரட்டலாம் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலானப் பிரச்சனை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு பாகிஸ்தானோ அல்லது பாகிஸ்தானுக்கு இந்தியாவோ சென்று தொடர்களில் விளையாடுவதில்லை. பொதுவான உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…