இவருக்கு மட்டும் இன்னும் இரண்டு ஓவர் கொடுத்தால் இந்தியா தோற்றிருக்கும்- ஷிவம் துபேவின் மோசமான சாதனை!

இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிராக நேற்றையப் போட்டியில் வென்றுள்ள நிலையில் ஷிவம் துபேவின் மோசமான ஓவர் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியை நேற்று இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பேட்டிங்கில் 163 ரன்களே சேர்த்திருந்தாலும் சிக்கனமான பவுலிங்கால் நியுசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. எல்லா பவுலர்களும் ரன்களை கொடுக்காமல் நியுசிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர்.

அப்போதுதான் 10 ஆவது ஓவரை வீசவந்தார் ஷிவம் துபே. அந்த ஓவரில் நியுசியின் ராஸ் டெய்லரும் செய்ஃபெர்ட்டும்  பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாச ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த ஓவரில் மட்டும் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார் ஷிவம் துபே. அதன் பிறகு அவருக்கு ஓவர் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை அவருக்கு இன்னும் ஒரு ஓவர் கொடுக்கப்பட்டு இருந்தால் போட்டி வேறு விதமாகக் கூட முடிந்திருக்கலாம்.

Published by
adminram