உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்… இந்திய அணி த்ரில் வெற்றி –அரையிறுதியில் !

Published on: February 27, 2020
---Advertisement---

3d5732f4ba360651f7e1aadaece543d4

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வெர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 133 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியில் வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். அதனால் போட்டி இந்தியாவின் கைகளில் இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் வேண்டும் என்று இருந்தது. இந்தியா தைரியமாக இருந்த நேரத்தில் 19 ஆவது நான்கு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார் அமேலியா கெர்.

இதையடுத்து கடைசி ஓவரில் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு பவுண்டரிகள் அடித்து கடைசிப் பந்தில் நியூஸிலாந்து வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்கிற நிலைமை உருவானது. ஆனால் கடைசி பந்தில் ஜென்சன் ரன் அவுட் ஆனதால்  இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Leave a Comment