பதிலுக்கு பதில் கொடுத்த இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி !

Published on: January 24, 2020
---Advertisement---

b72b2a65db4458714c55a8dd08a34431

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது.அந்த அணியின் மன்ரோ, கேன் வில்லியம்ஸன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஏமாற்றினாலும், கோலி மற்றும் ராகுல் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் 56 ரன்களும் கோலி 45 ரன்களும் சேர்த்தனர். அதன் பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியில் களமிறங்கி 58 ரன்கள் சேர்த்தார். கடைசி நேர அதிரடியால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது.

Leave a Comment