இரண்டாவது நாளில் இந்தியன் 2 வசூல் நிலைமை எப்படி இருக்கு?.. தமிழ்நாட்டை தாண்டி ஆல் ஏரியாவிலும் அவுட்!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே சகித்துக் கொள்ள முடியாத படமாக இந்தியன் 2 மாதிரி இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்தியன் 2 படத்தை கழுவி ஊற்றி வரும் நிலையில் அதன் இரண்டாம் நாள் வசூல் பெரிதளவில் பாதித்துள்ளது.

ஹிந்துஸ்தானி 2 என ஹிந்தியிலும், பாரத்தியூடு 2 என தெலுங்கிலும் வெளியான இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளிலே ஹிந்தியில் பெரிதாக ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் அந்த படத்தை முதல் நாள் அதிக ரசிகர்கள் கல்கி படத்தின் எஃபெக்ட் காரணமாக பார்த்து ரசித்தனர்.

ஆனால், அங்கேயும் ரசிகர்களுக்கு படம் பிடிக்காததால் இரண்டாம் நாளில் மிகப்பெரிய சரிவை வசூலில் இந்தியன் 2 சந்தித்துள்ளது. முதல் நாள் 7.9 கோடி ரூபாய் தெலுங்கில் இந்தியன் 2 படத்துக்கு வசூல் வந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று வெறும் 2.5 கோடி ரூபாய் வசூல் மட்டுமே வந்துள்ளது.

ஹிந்தியில் முதல் நாள் வசூலித்த 1.2 கோடி வசூலை இரண்டாம் நாளிலும் இந்தியன் 2 தக்க வைத்திருக்கிறது. தமிழில் இந்த படம் முதல் நாள் 16.5 கோடி ரூபாய் வசூல் செய்தது. படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக மிகப்பெரிய சரிவை சந்தித்து வெறும் 13 கோடி ரூபாய் மட்டுமே நேற்று வசூல் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இன்று ரசிகர்களுக்காக 20 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்பட்டு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியன் 2 திரைப்படம் கணிசமான தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் வசூலை இந்தியன் 2 எடுத்துள்ளது. தெலுங்கில் 10.4 கோடியும், ஹிந்தியில் 2.4 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 43 கோடி வசூலை இந்தியன் 2 இரண்டு நாட்களில் பெற்றுள்ளது.

உலகளவில் இந்தியன் 2 படத்தின் வசூல் ஓவர்சீஸிலும் உதை வாங்கிய நிலையில், அதிகபட்சமாக 50 முதல் 55 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கும் என்கின்றனர். 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் முழுதாக 100 கோடி வசூலை அள்ளுமா? என்பதே சந்தேகம் தான்.

Related Articles
Next Story
Share it