இந்தியன் 2 ஓடாததுக்கு காரணமே இந்தியன் 3-தான்!.. என்னப்பா சொல்றீங்க!...

by ராம் சுதன் |

சுஜாதாவுக்கும், ஷங்கருக்குமான நட்பு எப்படி இருந்தது என்பது பற்றியும், சுஜாதா தன் மனதில் ஷங்கரைப் பற்றி என்ன அபிப்ராயம் வைத்து இருந்தார் என்பது பற்றியும் சில தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

ஷங்கரோடு இணைந்து இந்தியன், சிவாஜி, முதல்வன், அந்நியன் போன்ற பல படங்களுக்கு சுஜாதா வசனம் எழுதியுள்ளார். ரோஜா படத்தைப் பார்த்து விட்டுத் தான் என்னோடு பணியாற்ற வாருங்கள் என்று சுஜாதாவிற்கு ஷங்கர் அழைப்பு விடுத்தார். அவரைப் பொருத்தவரை திட்டமிட்டு பணியாற்றுவதில் வல்லவர்.

ஒரு திரைப்படத்தை எடுத்துக்கிட்டா அந்தப் படத்துக்கான முழு கதையையும், வசனத்தையும் எழுதி முடிக்காம படப்பிடிப்புக்கு அவர் செல்ல மாட்டார். படப்பிடிப்பு தளத்திலே எந்தக் காட்சியை வேண்டுமானாலும் படமாக்குகிற ஆற்றல் அவருக்கு இருந்ததுன்னு சுஜாதா குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்க்கும்போது இந்தியன் 2 படம் எங்கே மிஸ் ஆச்சுன்னு நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னு தான் நான் சொல்வேன்.

இந்தியன் 2 படத்தைப் பொருத்த வரைக்கும் அதற்கான முழு கதை, வசனத்தையும் எழுதிக் கொண்டு தான் ஷங்கர் சென்று இருப்பார். அதற்குப் பிறகு தான் ஒரு காலகட்டத்துல இந்தியன் 2ஐத் தொடர்ந்து இந்தியன் 3ஐயும் எடுப்பதுன்னு முடிவு எடுக்கப்பட்டது.

முதல்லயே இந்தியன் 2, இந்தியன் 3 என இரு பாகங்களையும் ஷங்கர் திட்டமிட்டு எடுத்து இருந்தார் என்றால் இந்தத் தோல்வியைத் தவிர்த்து இருப்பார் என்ற எண்ணமே எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தைப் பெரிதும் எதிர்பார்த்து இணையதளத்தில் நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி விட்டார்கள். அதில் இருந்து மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. படக்குழுவினருக்கே இது பேரதிர்ச்சியைத் தந்தது என்றே சொல்ல வேண்டும்.

இது தவிர படம் வெளியான திரையரங்குகள் எல்லாம் காத்து வாங்குதாம். ஒரு காட்சிக்கு 20 பேர் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறதாம். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கான காசைத் திருப்பிக் கொடு என்று கேட்க முடியாத குறையோடு புலம்பி வருகிறார்களாம். இந்த நஷ்டத்தைப் போக்க இந்தியன் 2 வெளியிட்ட திரையரங்குகளுக்கு ராயன் படத்தின் மூலமாக சரிசெய்யப் போகிறார்களாம்.

Next Story