Categories: latest news tamil movie reviews

ஷங்கரோட பெஸ்ட் படம் இந்தியன்!.. வொர்ஸ்ட் படம் இந்தியன் 2!.. இந்தியன் 2 விமர்சனம் இதோ!..

இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து எதுவுமே சரியாக இல்லை என எதிர்பார்த்த நிலையில், அனிருத் இசையில் வந்த பாடல்களும் சொதப்பின. கடைசியாக படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதை பார்த்த கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஷங்கர் வேலையை மறுபடியும் காட்டி விட்டார் என நினைக்கத் தொடங்கினர்.

அவர்கள் நினைத்தபடியே ஃபர்னிச்சரை பலமாக போட்டு உடைத்து விட்டார் ஷங்கர். 250 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு மொக்கை படத்தை ஷங்கர் அதுவும் கமல்ஹாசனை வைத்து எடுப்பார் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இந்தியன் 2 படத்துக்கு முட்டுக் கொடுக்க கமல் ரசிகர்களாலே முடியாத அளவுக்கு ஒரு குப்பை படத்தை ஷங்கர் பட்டி டிக்கரிங் பார்த்து அதற்கு பெரியளவில் புரமோஷன்களையும் செய்து படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய மோசடியை செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன், முதல்வன், அந்நியன், ஐ உள்ளிட்ட படங்களின் மாஷ் அப் படம் போலவே இந்த இந்தியன் 2வை உருவாக்கியிருக்கிறார். யூடியூப் சேனல் நடத்தி வரும் சித்தார்த், பிரியா பவானி சங்கர், நண்டு ஜெகன் எல்லாம் தங்களோட வீட்டில் இருக்கும் குப்பையே தெரியாமல் ஊரில் உள்ள குப்பைகளை காமன் மேன் என கார்ட்டூன் வைத்து யூடியூப் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

லஞ்ச பிரச்சனை காரணமாக ஒரு பெண் மாடியில் இருந்து விழுந்து சாக அதற்காக சித்தார்த் போராடுகிறார். அவருக்கு அடி விழுவது தான் மிச்சம். இந்தியன் தாத்தாவாக சித்தார்த் மாறியிருந்தால் கூட படம் நல்லா சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், ஒரு அடி வாங்கியதும் இந்தியன் தாத்தா வந்தால் தான் இது மாறும் என அவர் சொல்லி சோஷியல் மீடியாவில் கம்பேக் இந்தியன் ஹாஷ்டேக்கை போடுகின்றனர்.

அதை பார்த்து விட்டு இந்தியன் தாத்தா இந்தியளவில் ஊழல் செய்யும் பெரும் புள்ளிகளை தேடிச் சென்று கொல்கிறார். இந்தியன் தாத்தா சொல்லும் விஷயத்தால் சித்தார்த் குடும்பத்தில் ஒரு பெரும் சோகம் நடக்கிறது. அதற்கு பின்னர் இந்தியன் தாத்தாவை ஊரே வெறுக்கும் படி சித்தார்த் ஒரு காரியம் பண்ண கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் இந்த இந்தியன் 2 படம்.

ரேட்டிங்: 2.5/5.

இந்தியன் 2 : சொதப்பல்

Published by
Saranya M