இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்… சம்பளம் பற்றி வாயே திறக்காத லைகா – ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு!

by adminram |

29bc7d42ff625c6d346f6c72e5a38f4f

ஷங்கரின் உதவியாளர்கள் பலருக்கு லைகா பல மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்பதால் ஷங்கர் தானே கொடுக்க முன்வந்துள்ளார்.

பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்குப் பின்னர் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இதனால் 8 மாதங்களுக்கும் மேலாக அந்த படத்தில் பணியாற்றி வரும் உதவியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தியுள்ளது லைகா நிறுவனம். இந்த படத்துக்காக பணிபுரியும் உதவி இயக்குனர்கள் அனைவரும் மாத சம்பளத்துக்கு பணியமர்த்தப்பட்டவர்கள் என சொல்லப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு ஆளாக, இப்போது இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தானே சம்பளம் கொடுத்து வருகிறாராம்.

Next Story