இந்தியன் 2 படத்துக்கு தேசிய விருது? நடிக்கத் தயங்கிய நெப்போலியன்... கமல் போட்ட ஸ்கெட்ச்...!
இந்தியன் 2 வரும் வெள்ளிக்கிழமை (12.07.2024) அன்று ரிலீஸாகிறது. இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்க என்ன காரணம் என்றால் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பது தான்.
இந்தியன் 3 பற்றித் தான் கமல் பேசறாரு. அனிருத் மியூசிக் சரியில்ல. அது இல்ல இது இல்லன்னு எப்பவும் பேசுறது தான் இந்தப் படத்துக்கு இவ்ளோ எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கமலும், ஷங்கரும் ஒரு மேஜிக் பண்ணியிருக்கப் போறாங்க.
இந்தியன் படம் வரும்போது நாங்க யாருமே எதிர்பார்க்கல. தமிழ்சினிமாவில் இப்படி ஒரு வெற்றிப்படமா என்று ஆச்சரியப்பட்டோம். அந்த வகையில் இந்தியன் 2 படமும் வந்துவிட்டது.
சென்சார்போர்டுக்குப் போய் வந்துவிட்டது. அதுல உமர்சந்த் என்ற ஒரு உறுப்பினர் இந்தப் படத்துல கமல் அதகளம் பண்ணிருக்காரு. கண்டிப்பா தேசிய விருது உறுதின்னு டுவீட் ஒண்ணு போட்டுருக்காரு. இது பெரிய ஆச்சரியமில்லை. இந்தயின் 2ல ஏழு கெட்டப். இந்தியன் 3ல 5 கெட்டப்.
ஒரு படத்தை அவ்வளவு சீக்கிரமா எந்த விஷயத்தாலும் கணிக்க முடியாது. ஒரு சினிமாவை நேசிக்கிற ஒரு நபர் மேல இவ்வளவு நம்பிக்கை வைத்து புரொமோஷன் ஹைதராபாத், சென்னை, மும்பைன்னு போய்க்கிட்டு இருக்குன்னா கண்டிப்பா ஏதோ ஒரு விஷயம் இருக்கு.
சீவலப்பேரி பாண்டி படத்தைப் பார்த்து விட்டு கமல் நெப்போலியனைப் பார்த்துப் பாராட்டினாராம். அப்போது உங்க கூட ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசைப்பட மருதநாயகம் படத்தில் நடிக்க வைத்தாராம். அதன்பிறகு அந்தப் படம் டிராப் ஆகிவிட நெப்போலியன் கோவிச்சிக்கக் கூடாதுன்னு நினைச்சு கமல் அவரை மறுபடியும் அழைத்து விருமாண்டி படத்தில் நடிக்க வைத்தாராம்.
அதன்பிறகு தசாவதாரம் பட வாய்ப்புக்கு அழைத்தார். கதையைச் சொன்னதும் எனது கேரக்டர் எதுன்னு கேட்க, கமல் சொன்னார். சார் இது ரொம்ப சின்னதா இருக்கேன்னு சொல்ல இது சின்னதா இருந்தாலும் உங்க கேரக்டர் பேரைச் சொல்லும்னு கமல் சொன்னார்.
அந்தப் படத்தில் 2ம் குலோத்துங்க சோழன் கேரக்டருக்காக 10 கிலோவை அதிகரிக்கச் சொன்னார். அதே போல் நடித்ததும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.